என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » கர்நாடகா அரசியல் குழப்பம்
நீங்கள் தேடியது "கர்நாடகா அரசியல் குழப்பம்"
கர்நாடகாவில் கூட்டணி ஆட்சியைக் காப்பாற்றுவதற்காக மதச்சார்பற்ற ஜனதா தளம் மற்றும் காங்கிரஸ் தலைவர்கள் புதிய வியூகங்களை வகுத்து வருகின்றனர்.
பெங்களூரு:
கர்நாடக மாநிலத்தில் மதச்சார்பற்ற ஜனதா தளம்-காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடக்கிறது. மதச்சார்பற்ற ஜனதா தளம் (ஜேடிஎஸ்) தலைவர் குமாரசாமி முதலமைச்சராகவும், காங்கிரஸ் கட்சியின் பரமேஸ்வரா துணை முதலமைச்சராகவும் பதவி வகிக்கின்றனர். இந்த ஆட்சியைக் கவிழ்க்க பாஜக தொடர்ந்து முயற்சி செய்து வருவதாக குற்றம்சாட்டப்படுகிறது.
இந்த சூழ்நிலையில் சமீபத்தில் நடந்து முடிந்த பாராளுமன்றத் தேர்தலில் ஆளும் கூட்டணி கடும் பின்னடைவை சந்தித்துள்ளது. இந்த அதிர்ச்சியில் இருந்து மீள்வதற்குள், ஆட்சியைக் காப்பாற்ற தலைவர்கள் பகீரத பிரயத்தனம் செய்ய வேண்டி உள்ளது. அதிருப்தி எம்எல்ஏக்களை பாஜக தங்கள் பக்கம் இழுத்து, ஆட்சியை கவிழ்க்க தொடர்ந்து முயற்சி செய்யலாம் என பரபரப்பாக பேசப்படுகிறது.
இதையடுத்து முதலமைச்சர் குமாரசாமியும், துணை முதலமைச்சர் பரமேஸ்வராவும் ஆட்சியைக் காப்பாற்றுவதற்கான புதிய வியூகங்களை வகுத்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பாஜகவின் திட்டத்தை முறியடிப்பது குறித்து இருவரும் ஆலோசனை நடத்தி உள்ளனர்.
மேலும், நாளை மறுநாள் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கூட்டத்தையும் சித்தராமையா கூட்டி உள்ளார். இதில் அனைவரும் கலந்துகொள்ளும்படி கொறடா உத்தரவும் பிறப்பிக்கப்படும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்த கூட்டத்தின்போது எம்எல்ஏக்கள் அனைவரும் கட்சிக்கு விசுவாசமாக இருக்க வேண்டும், பாஜகவின் பகட்டு வார்த்தைகளில் இருந்து ஒதுங்கியிருக்க வேண்டும் என அறிவுறுத்தப்படும்.
தேவைப்பட்டால் எம்எல்ஏக்களை சொகுசு விடுதி உள்ளிட்ட பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றுவதற்கும் வாய்ப்பு உள்ளதாக காங்கிரஸ் தலைவர் தெரிவித்துள்ளார்.

மேலும் காங்கிரஸ் கட்சியின் பல்வேறு அதிருப்தி எம்எல்ஏக்களை தொடர்பு கொண்டு, பாஜக பக்கம் போக வேண்டாம் என்றும், அமைச்சரவையில் இடம் தருவதாகவும் கூறி சமாதானம் செய்துள்ளனர்.
மேலும், நாளை மறுநாள் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கூட்டத்தையும் சித்தராமையா கூட்டி உள்ளார். இதில் அனைவரும் கலந்துகொள்ளும்படி கொறடா உத்தரவும் பிறப்பிக்கப்படும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்த கூட்டத்தின்போது எம்எல்ஏக்கள் அனைவரும் கட்சிக்கு விசுவாசமாக இருக்க வேண்டும், பாஜகவின் பகட்டு வார்த்தைகளில் இருந்து ஒதுங்கியிருக்க வேண்டும் என அறிவுறுத்தப்படும்.
தேவைப்பட்டால் எம்எல்ஏக்களை சொகுசு விடுதி உள்ளிட்ட பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றுவதற்கும் வாய்ப்பு உள்ளதாக காங்கிரஸ் தலைவர் தெரிவித்துள்ளார்.
×

X